Published : 31 Dec 2020 12:17 pm

Updated : 31 Dec 2020 12:17 pm

 

Published : 31 Dec 2020 12:17 PM
Last Updated : 31 Dec 2020 12:17 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்;  (டிசம்பர் 31 - ஜனவரி 6ம் தேதி வரை)

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்


(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆரம்பத்தில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம்.

ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும்.
வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதானப் போக்கு காணப்படும்.

பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும்.

கலைத்துறையினருக்கு பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றைக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகஜலட்சுமியை வெள்ளிக்கிழமையில் பூஜித்து வாருங்கள். பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
****************

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்கக் கூடும்.

புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளைக் கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் ரகசியங்களைக் கூறாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்துப் பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய்க்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.
******************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு இருக்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.
மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்கப் பணிகளை தள்ளி போடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினர் பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு புதிய உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!துலாம்விருச்சிகம்தனுசு ; வார ராசிபலன்கள்;  (டிசம்பர் 31 - ஜனவரி 6ம் தேதி வரை)தனுசுவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ThulamViruchigamDhanusuVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x