Published : 24 Dec 2020 12:55 pm

Updated : 24 Dec 2020 12:56 pm

 

Published : 24 Dec 2020 12:55 PM
Last Updated : 24 Dec 2020 12:56 PM

துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்;  டிசம்பர் 24  முதல் டிசம்பர் 30ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - சுக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய சுக ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சனி சாரம் பெற்று சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும்.

பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும். கலைத்துறையினருக்கு மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பைப் பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது..

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
***********

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாகப் பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காகப் பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினர் அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.
*************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூரியன், புதன், சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.

பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதிலாகல் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எதிலும் மெத்தனப்போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு அதிக பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: சிவபூஜை செய்து வணங்குங்கள். சிவாலயம் சென்று நந்திதேவரை வணங்குங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!ராசி பலன்துலாம்விருச்சிகம்தனுசு; வார ராசிபலன்கள்;  டிசம்பர் 24  முதல் டிசம்பர் 30ம் தேதி வரைதனுசுவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ThulamViruchigamDhanusuVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x