

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ரேவதி:
சனி பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குரு புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக வாழ்வீர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.வெளிநாட்டு வேலை முயற்சித்தவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து நல்ல சேதி வரும்.
குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதுபடுத்திப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மைகளைத் தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நிதானமாகச் செயல்படுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.
பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாகப் படிப்பது நல்லது.
பரிகாரம்: பைரவரை தினமும் வணங்கி வாருங்கள். முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய்க்கிழமை தோறும் வணங்குங்கள். மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
**********************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |