

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரட்டாதி:
சனி பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குரு சனி ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு அதிகமான உழைப்பில் நாட்டம் இருக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரத்து கூடும். ஆன்மிகச் செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் எந்தக் காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளைக் கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுர்யத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வார்கள். உங்கள் வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தை வலம் வந்து வணங்கி தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். கருடாழ்வாரை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |