சனிப்பெயர்ச்சி பலன்கள் ;அவிட்டம் நட்சத்திர அன்பர்களே! எதிலும் வெற்றி; பண வரவு கூடும்; போட்டிகள் குறையும்; அடுத்தக் கட்ட வளர்ச்சி! 

சனிப்பெயர்ச்சி பலன்கள் ;அவிட்டம் நட்சத்திர அன்பர்களே! எதிலும் வெற்றி; பண வரவு கூடும்; போட்டிகள் குறையும்; அடுத்தக் கட்ட வளர்ச்சி! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அவிட்டம்:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவும் கூடும். ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியைத் தரும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அடுத்த நிலைக்குச் செல்லும் வழி பிறக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவது பலவிதமான நன்மைகளைத் தரும். அய்யனார், கருப்பண்ணசாமி முதலான கிராம தெய்வங்களை வழிபடுங்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். ஒற்றுமை மேலோங்கும்.

*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in