சனிப்பெயர்ச்சி பலன்கள் ;திருவோணம் நட்சத்திர அன்பர்களே! எதிர்பாராத செலவு; மனவருத்தம்; திடீர் கருத்து மோதல்; புதிய வாய்ப்புகள்! 

சனிப்பெயர்ச்சி பலன்கள் ;திருவோணம் நட்சத்திர அன்பர்களே! எதிர்பாராத செலவு; மனவருத்தம்; திடீர் கருத்து மோதல்; புதிய வாய்ப்புகள்! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவோணம்:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி - சந்திரன் கூட்டணியில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக் கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம். எனவே, கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மைகளைத் தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்துமோதல் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியது என்றிருக்கும்.

கலைத்துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது அவசியம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும்.

பெண்களின் கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்து கூறலாம். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.

பரிகாரம்: சந்திர பகவானைத் தரிசனம் செய்வதால் மனக்குழப்பம் அகலும். பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து வாருங்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in