சனிப்பெயர்ச்சி பலன்கள் ; உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! தேக ஆரோக்கியம்; எதிர்ப்புகள் விலகும்; குடும்பத்தில் மகிழ்ச்சி; எதிர்பார்த்த உதவி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! தேக ஆரோக்கியம்; எதிர்ப்புகள் விலகும்; குடும்பத்தில் மகிழ்ச்சி; எதிர்பார்த்த உதவி!
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திராடம்:

சனி பகவான் உங்கள் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்குத் தந்தையாரின் குணாதிசயங்கள் அதிகம் நிறைந்திருக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் விருதுகள் பெறுவார்கள். பாராட்டுகளும் கிடைக்கும் சூழல் இருப்பதால் நேர்மையுடன் செயல்படுவது அவசியம்.
அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சூரிய பகவானை வழிபட உடல் நலம் சீராகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in