Published : 17 Dec 2020 11:49 am

Updated : 17 Dec 2020 11:49 am

 

Published : 17 Dec 2020 11:49 AM
Last Updated : 17 Dec 2020 11:49 AM

துலாம், விருச்சிகம், தனுசு : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்:


இந்த வாரம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும்.

பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள்.

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது.

மாணவமணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வக்குறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை பூஜித்து வாருங்கள். அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
**************************

விருச்சிகம்:

இந்த வாரம் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள்.


மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும்.

மற்றபடி வெளியூரில் இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். குடும்பப் பிரச்சிகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு உங்கள் படிப்பார்வம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். அரசியல்துறையினருக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு:

இந்த வாரம் முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள்.

திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஜென்ம சனியில் இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: திருப்பல்லாண்டு பாராயணம் செய்வது மனக்குழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!துலாம்விருச்சிகம்தனுசு : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரைதனுசுவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ThulamViruchigamDhanusuVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x