Published : 17 Dec 2020 11:17 am

Updated : 17 Dec 2020 11:17 am

 

Published : 17 Dec 2020 11:17 AM
Last Updated : 17 Dec 2020 11:17 AM

கடகம், சிம்மம், கன்னி : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்


புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

இந்த வாரம் காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள்.

மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு பெரும் முன்னெற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும்.

மாணவர்களுக்கு விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

அரசியல்துறையினருக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சுபநிகழ்வுகள் நிறைவேற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: அம்மனை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள்.

சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும்.

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருந்து வரும். கலைத்துறையினர், வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தானாகவே தேடி வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். பெண்களுக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சூரிய பகவானை வணங்கி வாருங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி:

இந்த வாரம் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும்.

குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும்.
மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மாணவர்களுக்கு படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். அரசியல்துறையினருக்கு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம்.

பெண்களுக்கு அவ்வப்பொது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு

எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: சுதர்சனருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

***************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரைகன்னிவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KadagamSimmamMeenamVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x