Published : 17 Dec 2020 10:48 am

Updated : 17 Dec 2020 10:48 am

 

Published : 17 Dec 2020 10:48 AM
Last Updated : 17 Dec 2020 10:48 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்


(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள்.

தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த மாதம் மன்னித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்வது நல்லது.

மாணவர்களுக்கு நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: முருகப் பெருமானை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.
~~~~~~~~

ரிஷபம்:

இந்த வாரம் புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும்.

பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள்.

உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் இது. மாணவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.
பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
~~~~~~~~~~~~~~~

மிதுனம்

மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

இந்த வாரம் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும்.

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள்.

வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் கவனக் குறைவு கூடாது. வியாபாரிகளுக்கு வேலையாட்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரயங்களைத் தவிர்க்கலாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவதற்கு உரிய நிலை சாதகமாக இருக்கிறது. மாணவர்களுக்கு விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்துறையினர் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய காலகட்டமாக அமைகிறது. பெண்களுக்கு எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சிவபெருமானை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!மேஷம்ரிஷபம்மிதுனம் : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MeshamRishabamMidhunamVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x