

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சுவாதி:
சனி பகவான் உங்களின் ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சுக்கிரன் - ராகு அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் சோம்பல் அறியாதவர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவுகள் ஏற்படும். மனஅமைதி பாதிக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரியத்தில் தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கலைத்துறையினர் ஏற்றம் காண்பார்கள். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தினமும் வணங்கி வாருங்கள். காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
***********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |