சனிப்பெயர்ச்சி பலன்கள் ; மகம் நட்சத்திர அன்பர்களே! முயற்சியில் வெல்வீர்கள்; பணிகளில் தாமதம்; ஆரோக்கியத்தில் கவனம்; குடும்பத்தில் அமைதி! 

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; மகம் நட்சத்திர அன்பர்களே! முயற்சியில் வெல்வீர்கள்; பணிகளில் தாமதம்; ஆரோக்கியத்தில் கவனம்; குடும்பத்தில் அமைதி! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகம்:

சனி பகவான் உங்களின் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் - கேது அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்துத் துறைகளிலும் அறிவுச் செறிவுடன் திகழ்வீர்கள். .

இந்த சனிப்பெயர்ச்சியில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மனதளவில் இடைவெளி ஏற்படும். பிள்ளைகள் புத்திசாதுர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும். கடன்களையெல்லாம் அடைப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பிறமொழி படங்களில் பணிபுரிய சந்தர்ப்பம் கூடி வந்தால் அந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். புகழ் மற்றும் விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு உங்கள் பொதுப்பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இனி இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவர்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யுங்கள். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in