

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீ சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்ல துவாதசியும் - க்ருத்திகை நக்ஷத்ரமும் - அமிர்தயோகமும் - ஸாத்ய நாமயோகமும் - பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு - அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து இரண்டரை வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்.
ராசியின் பெயரையும் சனியின் பெயரையும் அதனால் விளையும் பலனையும் பார்க்கலாம்.
மேஷம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்
ரிஷபம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சினை
மிதுனம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
கடகம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும்போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
சிம்மம் - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை
கன்னி - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
துலாம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
விருச்சிகம் - தைரிய வீர்ய சனி - தைரியம் அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
தனுசு வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும்போது அதிக கவனம் தேவை
மகரம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
கும்பம் - விரய சனி - வீண் விரயம் ஏற்படுதல்
மீனம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
*******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |