

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும்.
உடல் நலம் சீராக இருக்கும். நோயில் அவதிப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். எனினும் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டி வரலாம்.
கலைத்துறையினர் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உங்கள் காரியங்களில் மட்டும் எண்ணத்தைச் செலுத்தவும்.. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
அரசியல் துறையினருக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். உங்களின் தொகுதி செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். லாபத்தையும் பெறுவார்கள்.
பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இருந்த கோபம் குறையும். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.
பரிகாரம்: ”ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என 11 முறை சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
இந்த வாரம் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களைச் சுற்றி உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பண விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லை என்றாலும் மதிப்புள்ளதாக அமையும். கவலை வேண்டாம்.
வேலையாட்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்தில் பாராட்டு பெறும் வகையில் வேலையில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மாற்றம் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.
வாகனங்களைப் பிரயோகப்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
இதனால் மனதில் நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனத்தடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.
மாணவர்கள் கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். மனக்கவலை அகலும்.
---------------------------------------
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இந்த வாரம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம்.
காரியத் தடைகள் நீங்கும். வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
குடும்பத்துடன் வெளியூர் அல்லது ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். கவனமுடன் இருக்கவும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
அரசியல் துறையினருக்கு மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய உக்திகளைக் கையாண்டு மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதனால் முன்னேற்றம் கிடைக்கும்.
தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும்.
உடல்நலத்தைப் பொறுத்தவரை ரத்தம் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டுப் படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
---------------------------------------
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |