

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எந்தவொரு சிறிய விஷயத்தையும் சீக்கிரமாகவே கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம்.
தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தைச் சொல்லும்போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.
மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.
திருவாதிரை:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: புதன்கிழமையில் நவக்கிரகத்தில் புதன் பகவானை நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |