Published : 24 Nov 2020 01:24 PM
Last Updated : 24 Nov 2020 01:24 PM

அனுஷம், கேட்டை, மூலம்; தாராபலம்; மைத்ர பலம்; வதை தாரை; சம்பத்து தாரை; சாதக தாரை நட்சத்திர விவரங்கள்; 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 94

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நட்சத்திரங்களுக்கான தாராபலம் பற்றி பார்த்து வருகிறோம்! இந்தப் பதிவில் அனுஷம், கேட்டை, மூலம், ஆகிய நட்சத்திரங்களுக்கான தாரா பலத்தைப் பார்க்க இருக்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே, இந்தப் பதிவை படிப்பதற்கு முன், 87ஆவது பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளவும் அல்லது தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும், அப்போதுதான் இந்த தாராபலம் பற்றிய முழுவிவரத்தையும் நீங்கள் இன்னும் தெளிவுற அறிந்து கொள்ள முடியும்.

அனுஷம் நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

அனுஷம், பூசம், உத்திரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம். ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது. மேலும், முடி திருத்துதல், சவரம் செய்தல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை கூடாது. மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.


சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொழில் தொடங்குவது, வியாபாரம் ஆரம்பிப்பது, பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து எனும் செல்வ வளத்தைத் தரக்கூடியது.


க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியம் செய்தாலும் பலமடங்கு ஆதாயத்தை தரக்கூடியதாக இருக்கும். வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.


சாதக தாரை நட்சத்திரங்கள் -
அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வேலைக்கு முயற்சி செய்வது, பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது, இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது, தொழில் வியாபாரம் போன்றவற்றை தொடங்குவது, அல்லது அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளலாம், அயல்நாடு தொடர்பு உடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.

அதி மைத்ர தரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் எனும் அதிக நன்மைகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமாக இருந்தாலும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அயல்நாட்டு பயணங்கள், அயல் நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, ஆன்மிகப் பெரியோர்களை சந்திப்பது, ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும். பயணம் செய்யக்கூடாது. கடன் வாங்கக் கூடாது. புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.


பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் -
உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள். ஆக எந்தவொரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு நன்மையாக இருக்குமே தவிர, உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, வியாபார விஷயங்களில் ஈடுபடுவது, தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். வதை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது என்று பொருள். எனவே இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்கு தீராத துயரங்களைத் தரும்.
**************

கேட்டை நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். பலவித யோகங்களையும் நன்மைகளையும் தரக்கூடியது.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷெம தாரை நட்சத்திரங்களாகும். அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் வாங்க ஏற்றது.

சாதக தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்களாகும். எந்தவொரு காரியமும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தந்து யோகங்கள் பெற்றுத் தரும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனா்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும். லாபங்களையும் வருமானத்தையும் இரட்டிப்பாக்க மாற்றித் தரக்கூடியது.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அது மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். அதிக நன்மைகளைத் தரக்கூடியது. அயல்நாட்டுப் பயணங்கள், வெளியூர் பயணங்கள் போன்றவை செய்ய ஏற்றது.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்களாகும். எந்தவொரு காரியமும் உங்களுக்குக் கடுமையான பாதிப்புகளை தந்து மன உளைச்சலை தரக்கூடியதாக மாறும்.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு நன்மைகளைத் தரும். உங்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் தராது.

வதை தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். எந்தவொரு காரியமும் உங்களுக்கு தீராத துயரத்தை தரக்கூடியதாக இருக்கும். மன நிம்மதியைக் குலைக்கும்.
********************

மூலம் நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
மூலம், அஸ்வினி, மகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ஜென்ம தாரை நட்சத்திரங்களாக வேலைசெய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
பூராடம், பரணி, பூரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். பல நன்மைகளையும், யோகங்களையும் பெற்றுத்தரக் கூடியது.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
திருவோணம், ரோகிணி, அஸ்தம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும். சொத்துகள் வாங்குவது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது, புதுமனைப் புகுவிழா, திறப்பு விழா போன்றவை செய்ய ஏற்றதாகும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -
சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்களாகும். எந்தவொரு காரியமும் உங்களுக்கு ஆதரவும், நன்மையும், லாபத்தையும் பெற்று தரும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மரங்களும் நன்மைகளை தரக் கூடிய நட்சத்திரங்கள். எந்தவொரு காரியமும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்து தரும்.


அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
ரேவதி, ஆயில்யம் கேட்டை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும். அதிகப்படியான நன்மைகளையும், லாபத்தையும் மனநிறைவையும் தரக்கூடியது.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -
உத்திராடம், கார்த்திகை, உத்திரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். எந்தவொரு செயலும் உங்களுக்கு கடுமையான பிரச்சினைகளையும் பாதிப்புகளையும் தரக்கூடியது.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் தராது. பிறருக்கு மட்டுமே நன்மை தரும். மற்றவர்களின் சந்தோஷத்திற்காக வேலை செய்து தர வேண்டியது வரும்.


வதை தாரை நட்சத்திரங்கள் -
பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். கடுமையான பாதிப்புகளையும், மன உளைச்சலையும், மன நிம்மதியையும் குலைத்து தீராத துயரத்தைத் தரும்.

அடுத்த பதிவில் பூராடம், உத்திராடம், திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் தாரா பலன் தரக்கூடிய நட்சத்திரங்களைச் சொல்கிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- வளரும்
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x