

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரட்டாதி:
குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குடும்பப்பாசம் மிகுந்தவரான பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.
சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபாரப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளில் கவனமாகச் செயல்படுவது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களைக் கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும் செயல்படுவதும் அவசியம்.
குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது.
பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.
மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். அரசியல்துறையினருக்கு வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். முன்னேற்றத்தைத் தரும்.
மதிப்பெண்கள்: 68% நல்லபலன்கள் ஏற்படும்.
*********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |