ஆயில்யம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; எச்சரிக்கை தேவை; வாகனங்களில் கவனம்; குடும்பத்தில் சகஜநிலை; மனதில் கவலை! 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; எச்சரிக்கை தேவை; வாகனங்களில் கவனம்; குடும்பத்தில் சகஜநிலை; மனதில் கவலை! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஆயில்யம்:

குரு பகவான் உங்களின் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

தொலைநோக்கு பார்வையும் உயர்ந்த எண்ணங்களும் உடைய ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த குருப்பெயர்ச்சியில் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும்.

பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். பெண்கள் எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு புதிய மாற்றம் வரும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: நாகதேவதை வழிபாடு செய்யுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்.

மதிப்பெண்கள்: 81% நல்லபலன்கள் ஏற்படும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in