புனர்பூச நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்;   எதிர்ப்புகள் விலகும்; பயண லாபம்; நல்ல வேலை கிடைக்கும்; குடும்பத்தில் அமைதி! 

புனர்பூச நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்;   எதிர்ப்புகள் விலகும்; பயண லாபம்; நல்ல வேலை கிடைக்கும்; குடும்பத்தில் அமைதி! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:

குரு பகவான் உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாகப் புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபடுங்கள். மனம் அமைதி பெறும். நல்ல வழி கிடைக்கும்.

மதிப்பெண்கள்: 67% நல்லபலன்கள் ஏற்படும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in