Published : 20 Aug 2020 16:51 pm

Updated : 20 Aug 2020 16:51 pm

 

Published : 20 Aug 2020 04:51 PM
Last Updated : 20 Aug 2020 04:51 PM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்; ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரை

vaara-rasipalan

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)


இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள்.

உடல் நலக்குறைவு ஏற்படலாம். சுக்கிரன் சஞ்சாரத்தின் மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சுமுகமான நிலை நீடிக்கும்.

உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும்.

குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துகள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். பெண்களுக்கு கடன் பிரச்சினை தீரும்.

கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் அகலும். போட்டிகள் நீங்கும். மாணவர்களுக்கு புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.

**********************

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் உங்களுக்கு பூமி மூலமும், வீடு மூலமும் லாபம் தரும் வாரமாக இருக்கும்.

தடைபட்டிருந்த வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது பணச் சிக்கலைத் தீர்க்கும்.
********************************

மிதுனம்
(மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

வசதிகள் பெருகும்,. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சுக்கிரன் தருவார். மரியாதையும் அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.
உங்களிடம் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வைக் காண்பார்கள். பெண்கள் எதையும் கவனமாகச் செய்வது நல்லது. கலைத்துறையினர் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.
மாணவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: பெருமாளை வணங்குவதால் காரியத் தடைகள் நீங்கும். பணவரத்து பெருகும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


மேஷம் ரிஷபம் மிதுனம்; வார ராசிபலன்; ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரைமேஷம் ரிஷபம்மிதுனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author