

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரட்டாதி:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஒன்றாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
" மொழிவது அற மொழி " என்பதை உணர்ந்த பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால், பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் மற்றும் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் பழகுவது நல்லது.
பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியைத் தரும்.
கலைத்துறையினர் புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இரக்க சிந்தனை மேலோங்கும். எதிர்ப்புகள் விலகும்.
அரசியல்துறையினருக்கு செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மனத் தெளிவு உண்டாகும்.
மாணவர்கள் எதிர்கால நலன் கருதி எந்தக் காரியத்தையும் செய்வது நன்மை தரும்.
மதிப்பெண்: 71%
தெய்வம்: ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வருவதால் பொருளாதாரம் சிறக்கும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், வழக்குகளில் சாதக நிலை ஏற்படும்.
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |