அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
Updated on
2 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனுஷம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினாறாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இரண்டாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"தெய்வம் இகழேல்" என்பதை உணர்ந்த அனுஷம் நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், காரியத்திலான தடைகளும் தாமதங்களும் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

மதிப்பெண்: 72%

தெய்வம்: ஸ்ரீகாமாக்ஷியை வழிபட்டு வருவதன் மூலம் மங்கல காரியங்கள் நடக்கும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால் மனக்கலக்கம் நீங்கும்.

******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in