

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விசாகம்:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு மூன்றாம் நடத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
" துன்பத்திற்கு இடம் கொடேல்" என்பதை உணர்ந்த விசாகம் நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். மிகவும் கவனமாகக் கையாண்டால் தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு தொழிலானது வாக்குவன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுர்யத்தால் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அரசியல் துறையினர் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சூரியன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கச் செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மதிப்பெண்: 65%
தெய்வம்: பாலாம்பிகையை, ஸ்ரீபாலாவை வழிபட்டு வாருங்கள். தடைகள் அகலும்.
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |