ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
Updated on
2 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


ஆயில்யம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி நான்காம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பத்தாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பதை உணர்ந்த ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகு கேது பெயர்ச்சியால், துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரியத்தில் வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மைகளைத் தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாகத் தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

மதிப்பெண்: 75%

தெய்வம்: நாகதேவதையை வழிபட்டு வருவதால் பிரச்சினைகள் குறையும்.

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், வீடு மனை வாங்குவீர்கள்.

*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in