புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு ; ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
Updated on
2 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:

கிரகமாற்றம்:

01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஆறாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பனிரெண்டாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

"மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்" என்பதை உணர்ந்த புனர்பூசம் நட்சத்திர அன்பர்களே.

நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவர். இந்த ராகு கேது பெயர்ச்சியால், சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மை தருவதாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நல்லமுடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் காத்திருக்கின்றன.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.
பெண்களது ஆலோசனையைக் கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வையைக் கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் ஏற்படும். சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.
மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

மதிப்பெண்: 71%

தெய்வம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வருவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்

+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும்

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in