

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
திருவாதிரை:
கிரகமாற்றம்:
01-09-2020 அன்று பகல் 02:16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஏழாம் நட்சத்திரமான மிருகசீரிஷம் 2ம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதின்மூன்றாம் நட்சத்திரமான கேட்டை 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
"முன் கை நீண்டால் முழங்கை நீளும்" என்பதை உணர்ந்த திருவாதிரை நட்சத்திர அன்பர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், எதிர்பார்த்த நல்ல செயல்கள் அனைத்தும் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவார்கள். வேலைத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் எதையும் கவனமாக எடுத்துச் சொல்வது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினை தீரும்.
பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனக் குழப்பம் நீங்கும்.
கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
அரசியல் துறையினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மதிப்பெண்: 75%
தெய்வம்: ஸ்ரீநடராஜரை வழிபடுவதால் நலம் வந்து சேரும்
+ : மொத்தத்தில், இந்த ராகு - கேது பெயர்ச்சியால், வெளிநாடு வாய்ப்பு லாபம் தரும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
**********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |