

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
இந்த வாரம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரியத் தடை தாமதம் ஏற்படலாம்.
சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 7ல் இருப்பது உஷ்ண சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும். ஏற்கெனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.
சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள்.
எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். கலைத்துறையினருக்கு யோக காரகன் சுக்கிரன் ராசிநாதன் சனிக்கு கேந்திரம் பெறுவதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.
அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடத்தில் இருப்பவர்கள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
*******************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும்.
ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 5ல் இருப்பதால் வீண் மனக்கவலை நீங்கும். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது.
சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும்.
*****************************
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
இந்த வாரம் கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.
மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 5ல் இருப்பதால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும்.
இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். செவ்வாய் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுத் தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி குலதெய்வத்தை வணங்கி வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.
*******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |