மேஷ ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

புத்தி சாதுர்யத்தால் புகழையும் செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே!

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு சஞ்சாரம் செய்வதாலும் வக்ரம் பெற்ற குரு உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் எண்ணிய காரியங்களைத் திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் பலத்தால் பணவரவு இருக்கும்.

எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துகள் மீது கவனம் தேவை.

தொழில் ஸ்தானாதிபதி சனியின் சஞ்சாரத்தால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு : சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு : காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக் குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

அரசியல்துறையினருக்கு : மனக்கவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்தக் காரியத்தையும் யோசித்துச் செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அஸ்வினி:
குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பொருளாதார உயர்வு, கடன்கள் குறையக் கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.

பரணி:
கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். நண்பர்கள் உறவினர்களிடையே பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி கவசம் படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலைத் தவிர்க்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in