கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம்:
தனது அன்பினால் அனைவரையும் கட்டிப்போடும் கடக ராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள்.

பெண்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கணவருக்கும் உங்களுக்குமான இன்னல்கள் தீரும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கடன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. கிடைத்ததைப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: கார்த்திகை விரதம் இருந்து முருகக் கடவுளை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
**************************

சிம்மம்:

தனக்கென உறவுகளையும் பாதைகளையும் ஏற்படுத்திக்கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சைக் கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம்.

நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.

குடும்பச் செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளைக் கேட்பார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உண்மைத் தன்மைக்கு எப்போதும் வெற்றி உண்டு. அதைப் பயன்படுத்தி நல்ல லாபங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அதற்கான நிதி வசதியும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வம் ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
**************************

கன்னி:

தனது கௌரவத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். ஆனாலும் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறக் கூடும். உடல் ஆரோக்கியம் அடையும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.

பெண்கள் மனதில் புதுத் தெம்புடன் வேலை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 6
பரிகாரம்: குரு ராகவேந்திரரை வணங்கி வர மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in