

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
பெரியவர்களை மதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
இந்த வாரம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் பிரச்சினைகள் நீங்கும்.
மரியாதை அந்தஸ்து உயரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு வியப்பார்கள். உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளைப் பெறுவார்கள். ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பைப் பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். செயல்களில் வேகம் வெளிப்படும். பெண்களுக்கு இல்லத்தில் விசேஷங்கள் நடைபெறுவதற்கு உங்களுடைய உதவிகள் தேவைப்படலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாகப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்யுங்கள். மல்லிகை மலர் சார்த்தி வழிபடவும். பணப்பற்றாக்குறை பிரச்சினைகள் விலகும்.
*************************
ரிஷபம்:
கோபத்தைக் கட்டுபடுத்தும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.
உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ மற்றும் ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது யோசித்து செயல்படுவது நல்லது. தொழிலதிபர்கள்: புதிய வாடிக்கையாளர்களை நிரம்பப் பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.
புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.
பெண்களுக்கு சில சூழ்நிலைகளில் முடிவு எடுக்க முடியாமல் தவிக்க நேரிடலாம். லாபகரமான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை - சிவப்பு
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: முருக வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். பணப் பிரச்சினைகள் அகலும்.
*************************
மிதுனம்:
யார் தங்களின் குறைகளை கூறினாலும் நிதானமாக தனது தீர்ப்புகளை கூறும் மிதுன ராசி அன்பர்களே!
இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.
தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு சிறிது தாமதப்பட்டாலும், கைக்கு வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.
மாணவர்களுக்கு எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுங்கள். முடிந்தால், வெண்ணை சாற்றி வழிபடுங்கள். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
*************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |