

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே!
இந்த வாரம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய தொடர்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று எவரிடமும் வீண் சண்டையையும் வாக்குவாதத்தையும் தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.
சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்யத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது.
எதிர்பார்த்த பணம் வார இறுதியில் கிடைக்கலாம். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நடத்தி வாருங்கள். நவகிரகங்களின் அருளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி
*******************************
கும்பம்
அனைவரிடமும் விட்டுக் கொடுத்துப் போகும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே!
இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.
அடுத்தவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களைச் சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.
குடும்பத்தில் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.
பெண்களுக்கு வீண்பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு மல்லிகை மலர் சமர்ப்பியுங்கள். உங்களுக்குத் தேவையான பண வசதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி
*****************************
மீனம்
செய்யும் வேலையைத் திறமையாக முடித்து நற்பெயர் எடுக்க விரும்பும் மீன ராசியினரே!
இந்த வாரம் வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அனுகூலமான பலன்களைத் தரும். பணவரவு மன திருப்தியைத் தரும்.
புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியைத் தரும்.
நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.
தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சுத் திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு வெளியூர் பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீமன் நாராயணரை வழிபட துன்பங்கள் விலகும். சிக்கல்கள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி
*****************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |