

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்
எதிர்கால நலனை மனதில் வைத்து முன்னேறத் துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே.
இந்த வாரம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கடன் பிரச்சினைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை நினைத்து வணங்க சுப காரியத்தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள் :ஞாயிறு, செவ்வாய்
*******************************
ரிஷபம்
மற்றவர்களோடு பழகிக் கொண்டிருந்தாலும் தனிமையையே அதிகம் விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.
முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த பணவரத்து கிடைக்கப் பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். பெண்கள் எந்தக் காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை கொண்டிருப்பீர்கள்.
அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெண் தாமரை மலரால் அர்சித்து வர துன்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, ஞாயிறு
*****************************
மிதுனம்
பெரியவர்களை மதித்து நடக்கக் கூடிய மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள். இந்த வாரம் பணவரத்து கூடும். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். கெட்ட கனவுகள் தோன்றும்.
உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும்.
நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவுத்திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.
துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பரிகாரம்: ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து பூஜித்து வாருங்கள். பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி
*******************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |