துலாம் ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம்:
இந்த மாதம் உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்படும். அவை மளமளவென்று நடந்தேறும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்து சேரும்.
குடும்பத்தில் உங்களின் எண்ணங்களும் செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை இந்தக் காலகட்டத்தில் முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும். தொழிற்சாலைகளில் பணி செய்வோருக்கு கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டமிது.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். ஊதியம் உயரும் வாய்ப்பு உண்டு.
பெண்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்
கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.
மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும். ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினால் ஏற்று அதை செயல்படுத்துவதன் மூலம் நற்பெயர் வாங்கலாம்.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் கோபத்தை கட்டு படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் பாடங்களைப் படிப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பைப் பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள்.
சுவாதி:
இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும்போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும்போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள்.
பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோயிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்து சிவபுராணம் சொல்லி வாருங்கள். மனதில் தெளிவு பிறக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in