மேஷ ராசிக்காரர்களுக்கு - ஜூலை மாத பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு - ஜூலை மாத பலன்கள்

Published on

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்:
இந்தமாதம் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது.
குடும்பத்தில் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக்கொள்ள மாட்டீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமுகமாக நடைபெறும்.
தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும். பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அபிவிருத்தியைத் தரும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய காரியங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்துவந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
பெண்கள் எதிர்விளைவுகளை முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக விடுங்கள். பக்குவமாகவும் இதமாகவும் பேசுவதுதான் உங்கள் நன்மைக்கு பக்கபலமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தொழிலிடத்தில் ‘தான்’ என்ற அகங்காரம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.
அஸ்வினி:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.
பரணி:
இந்த மாதம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்கச் செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும். கவனம் தேவை. எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொள்ள அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும். சஷ்டி தோறும் அருகிலிருக்கும் முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வீட்டில் தினமும் முருகனை வணங்கி வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, ,24

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in