Published : 25 Jun 2020 12:55 pm

Updated : 25 Jun 2020 12:55 pm

 

Published : 25 Jun 2020 12:55 PM
Last Updated : 25 Jun 2020 12:55 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன் ; ஜூன் 25 முதல் ஜூலை 1ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

இந்த வாரம் அறிவுத் திறன் கூடும்.
இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும்.
உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும்போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும்போதும் கவனமாக இருப்பது நல்லது.


குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு அறிவுத் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.
அரசியல்வாதிகளுக்கு லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். மாணவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 3, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
*************************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் எல்லாக் காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
ராசிக்கு நான்கில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.
குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். கலைத்துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அரசியல்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 5, 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
************************************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் எந்தவொரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும்.
முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.
பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமை: வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 3, 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மகரம் கும்பம் மீனம் ; வார ராசிபலன் ; ஜூன் 25 முதல் ஜூலை 1ம் தேதி வரை மீனம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author