Published : 25 Jun 2020 12:20 pm

Updated : 25 Jun 2020 12:20 pm

 

Published : 25 Jun 2020 12:20 PM
Last Updated : 25 Jun 2020 12:20 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் ; ஜூன் 25 முதல் ஜூலை 1ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.
எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்துச் செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் கூடும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும்போது கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணித் திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.
பெண்கள் சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கலைத்துறையினர் உத்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களைப் படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்திப் படிப்பது நல்லது.

பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5, 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
****************************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும்.
எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு 7ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
**********************************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும்.
எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யத் தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.


எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்குத் தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.
அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


துலாம் விருச்சிகம் தனுசு ; வார ராசிபலன் ; ஜூன் 25 முதல் ஜூலை 1ம் தேதி வரை தனுசுபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author