Published : 28 May 2020 11:07 am

Updated : 28 May 2020 11:07 am

 

Published : 28 May 2020 11:07 AM
Last Updated : 28 May 2020 11:07 AM

மகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.


கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும்.


குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை.
வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.
பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்டநாள் பிரச்சினைகள் அகலும்.


அரசியல்வாதிகளுக்கு புதிய ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சல்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
*****************************************************************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


இந்த வாரம் கவுரவப் பிரச்சனை உண்டாகும்.


நீங்கள் நல்லதாகப் பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதைத் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்பு உண்டு.


சூரியன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். நீண்டநாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம்.


தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையைச் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.


பெண்களுக்கு : அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும்.


கலைத்துறையினருக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருக்கும் குறைகள் அகலும்.


மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசிப் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
*************************************************************************************

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும்.


உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை.


சூரியன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது.
வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.


தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும்போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது.


உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.


பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
கலைத்துறையினர் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


மகரம் கும்பம் மீனம் : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author