கடகம், சிம்மம், கன்னி : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை

கடகம், சிம்மம், கன்னி : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை
Updated on
2 min read


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


இந்த வாரம் எந்த விஷயங்களிலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள்.


பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிரச்சினைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.


பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எதையும் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்தி சமாளிப்பீர்கள்.


அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 4
பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
***************************************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும்.


ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.


குடும்பாதிபதி புதன் லாபஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாகப் பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை.


கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாகப் பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.


புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்து இருக்கும்.


பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு லாபம் ஏற்படும்.


அரசியல்வாதிகளுக்கு இருந்த இன்னல்கள் குறையும்.


மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களைப் படித்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 6, 9
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
*****************************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.
புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.
அனுபவபூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் அகலும்.
கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 6
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.
****************************************************************************

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in