Published : 06 May 2020 16:11 pm

Updated : 06 May 2020 16:11 pm

 

Published : 06 May 2020 04:11 PM
Last Updated : 06 May 2020 04:11 PM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன் (மே 7 முதல் 13ம் தேதி வரை)

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)இந்த வாரம் ராசியாதிபதி சந்திரன் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. எதிர்ப்புகள் விலகும்.


பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.


பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.


தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.
குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.


பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


மாணவர்களுக்கு : சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
**************************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கிறார்.


ராசியை செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்க்கிறார்.


வீடு மனை சம்பந்தமான இனங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.


சிறிய விஷயங்களில் கூட அவசரம் தோன்றலாம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது.
பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.


கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
*************************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


இந்த வாரம் ராசிநாதன் புதன் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருக்கிறார். ராசியை செவ்வாய் எட்டாம் பார்வையால் பார்க்கிறார். அதிசாரம் பெற்றிருக்கும் குருவும் பார்க்கிறார். சுபச் செலவுகள் உண்டாகும்.


மற்றவர்களால் இருந்த மனக்கஷ்டம் அகலும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.


தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.


கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: லட்சுமி வராஹப் பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

கடகம் சிம்மம் கன்னி ; வார ராசிபலன் (மே 7 முதல் 13ம் தேதி வரை)பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்வார ராசிபலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author