சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; பூராடம் நட்சத்திரப் பலன்கள்!

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; பூராடம் நட்சத்திரப் பலன்கள்!
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


பூராடம்:


கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் இரண்டாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் பதின்மூன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் இரண்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் இரண்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று நான்காம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்க்கும் குணமுடைய பூராட நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.
கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.
மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

+: பணவரத்து கூடும்
-: உங்கள் செயலில் மற்றவர்கள் குறை காணலாம்

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்கி வர மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in