

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
புனர்பூசம்:
கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் பன்னிரெண்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று பதி்னேழாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
எப்போதும் நிதானமாகக் காணப்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் நட்சத்திராதிபதி குருவின் பாதசார சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்கள் வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
+: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்
-: எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம்
பரிகாரம்: ஸ்ரீராமரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |