சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; மிருகசீரிஷம் நட்சத்திரப் பலன்கள்!

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; மிருகசீரிஷம் நட்சத்திரப் பலன்கள்!
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:
கிரகமாற்றம்:

08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் பதி்னேழாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் பதினான்காம் நட்ச்த்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் பதி்னேழாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் பதி்னேழாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று பதினொன்பதாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் காரியத் தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நட்சத்திராதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள், சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

+: பணவரத்து அதிகரிக்கும்
-: கோபத்தால் பிரச்சினைகள் வரலாம்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாயை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in