Published : 11 Mar 2020 16:03 pm

Updated : 17 Mar 2020 11:25 am

 

Published : 11 Mar 2020 04:03 PM
Last Updated : 17 Mar 2020 11:25 AM

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 20 ;  புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள்!  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

27-natchatirangal-20

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 20 ;
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள்!


வணக்கம் வாசகர்களே.
புனர்பூசம் நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம். இன்னும் நிறைய தகவல்களைப் பார்ப்போம்.
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் குணவான்கள், நேர்மையானவர்கள், எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்கள் என்றெல்லாம் பார்த்தோம்.

தாய் வழி்உறவினர்கள், சகோதர சகோதரிகளிடம் அதிக நம்பிக்கையும் பாசமும் வைத்திருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

மார்க்கெட் பகுதிகள், கடைவீதிகள், மூங்கில் கூடை, மண்பாண்டங்கள் இவை எல்லாமே புனர்பூசத்தைக் குறிக்கும். வெளிநாட்டில் வாழ்க்கை, நீர்நிலைகள், கடல் பகுதிகள், ஆற்றங்கரையோரங்கள், கிணறு என இவையும் புனர்பூசத்தை குறிக்கும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு, நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் என சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? அதாவது காலச்சக்கரத்தில் நல்ல நெருங்கிய நண்பராக இருப்பவர், ஏதாவதொரு காரணத்தினால் இவரை விட்டுப் பிரிந்து செல்வார். அது வேலை காரணமாக அல்லது தொழில் நிமித்தமாக, திருமணம் போன்ற காரணங்களாக இருக்கும். ஆனால் நட்பு முறியாது.
மீண்டும் புதிய, ஆழமான நட்பு ஏற்படும். அந்த நட்புக்கும் இதே கதிதான் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் எளிதில் நம்பக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடன் கொடுத்தால் யாரும் திரும்பத்தரமாட்டார்கள். அதேபோல இவர்கள் கடன் வாங்கவும் கூடாது, கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் மான அவமானங்களுக்கு பயந்தவர்களாக இருப்பதால் விபரீத முடிவுகளையும் எடுக்கத் தயங்கமாட்டார்கள். எனவேதான் கடன் வாங்கக்கூடாது.

சிறப்பு விபரங்களைப் பார்க்கலாம்-

தேவதை - அதிதி

அதிதேவதை - ஶ்ரீராமர்

மிருகம்- பெண் பூனை

பறவை - அன்னம்

மலர் - முல்லை

தானியம் - கொண்டைக்கடலை, வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை நிவேதனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

விருட்சம் - மூங்கில் மரம், இந்த மூங்கில் மரத்தை தல விருட்சமாக கொண்ட ஸ்தலங்கள்-
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், திருவள்ளூர் திருப்பாசூர் வாசீஸ்வரர் ஆலயம்,
நாகப்பட்டிணம் கீழ்பெரும்பள்ளம் நாகநாதர் ஆலயம் (கேது பரிகார ஆலயம்) மற்றும்,
தேனி தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் ஆலயம்.

இந்த ஆலயங்களுக்கு புனர்பூச நட்சத்திர நாளில் சென்று வழிபடுவது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.

இந்த மூங்கில் மரம் இப்போது “lucky bamboo” என்ற போன்சாய் வடிவங்களில் கிடைக்கிறது, அதை உங்கள் வீட்டிலும், பணிபுரியும் இடத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். நன்மைகள் ஏராளமாக உண்டாகும்.

பொதுவாக மூங்கிலின் வளர்ச்சி அபாரமானது, ஒரேநாளில் ஒரு மீட்டர் அளவில் வளரக்கூடியது. நிறையபேர் தங்கள் தொழில் கூடங்களிலும், நட்சத்திர விடுதிகளின் மாடிகளிலும் கூட வளர்ப்பார்கள். எனவே எந்த நட்சத்திரக்காரர்களும் இந்த மூங்கிலை வளர்க்கலாம்.

கேது திசை நடப்பவர்கள் மூங்கிலை வளர்த்து வந்தால் கேதுவின் தோஷம் வெகுவாக குறையும் என்பது உறுதி.

புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும், அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தருவதும், நினைத்தது நினைத்தபடியே முடித்து வெற்றி காணவும் கீழ்கண்ட இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை பயன்படுத்துங்கள்-

பூசம்- அனுஷம்- உத்திரட்டாதி இந்த நட்சத்திர நாட்களில் தொடங்கும் எதுவும் புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றியைத் தரும்.


ஆடை, ஆபரணங்கள் வாங்க, சொத்துக்கள் வாங்க, வாகனங்கள் வாங்க - அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள், கடன் வாங்க, கடன் அடைக்க, வேலைக்கு மனு செய்ய, வேலையில் சேர, வங்கியில் கணக்கு தொடங்க - கார்த்திகை, உத்திரம், இந்த நட்சத்திர நாட்களில் செய்யலாம்.

உதவிகள் கிடைக்கவும், நன்மையான காரியங்கள் நடக்கவும், சுப விஷயங்கள் செய்யவும்- மிருகசீரிடம், சித்திரை இந்த நட்சத்திர நாட்களை பயன்படுத்துங்கள்.

அதிக உதவிகள் கிடைக்கவும், மிகமுக்கியமான நன்மைகள் நடக்கவும், சுப விசேஷங்கள் விமரிசையாக செய்யவும் - திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திர நாட்களில் செய்ய அதிக நன்மைகள் உண்டாகும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள், பயணங்களை செய்யக்கூடாத நட்சத்திரநாட்களும் இருக்கின்றன. முக்கிய ஒப்பந்தம் செய்யக்கூடாத, எந்தவொரு சுப விஷயங்களையும் செய்யக்கூடாத, நண்பர்களாக சேரக்கூடாத, வாழ்க்கைத்துணையாக சேர்க்க கூடாத நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவை - ஆயில்யம்,கேட்டை,ரேவதி.

புனர்பூசக்காரர்களே... உங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத, உங்கள் முயற்சிகளில் உங்களுக்கு உபயோகமில்லாத, ஆனால் மற்றவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய நட்சத்திரங்கள்- பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்கள்.

நண்பர்களாக நினைத்துக்கூட பார்க்கக்கூடாத, வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கக்கூடாத, எந்தவித காரியங்களையும் தொடங்கக் கூடாத, பயணங்களை தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்- நட்சத்திர நாட்கள் ... ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திராடம், அவிட்டம். இந்த நட்சத்திரங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அடுத்த பதிவில் புனர்பூச நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்குமான தகவல்களைப் பார்ப்போம்.


- வளரும்
*******************************************************


தவறவிடாதீர்!

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 20 ;  புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள்!  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்27 நட்சத்திரங்கள்ஏ டூ இஸட் தொடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author