மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 பிப்ரவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 பிப்ரவரி 2026
Updated on
1 min read

மேஷம்: அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணம் அலைச்சல் தந்தாலும் அனுகூலம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வந்து சேரும். வருங் காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். பிள்ளை களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

கன்னி: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். விலகியிருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.

துலாம்: சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த பகை நீங்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். மூத்த சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுவது நல்லது.

விருச்சிகம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் மளமளவென்று நிறைவேறும். குடும்பத்தில் சின்னச் சின்ன செலவுகள் வந்துபோகும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்கள். திடீர் பயணம் ஏற்படும்.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று வரும். ஆடை, ஆபரணங்கள், நவீன மின்சாதனங்கள் வாங்கு வீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

மீனம்: முன்கோபம், அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். யாருக்கும் எந்தவித உத்தரவாதமும் தரவேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 பிப்ரவரி 2026
ஜோதிட நாள்காட்டி 20.02.2026 | மாசி 08 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in