Published : 25 Mar 2021 10:45 am

Updated : 25 Mar 2021 10:46 am

 

Published : 25 Mar 2021 10:45 AM
Last Updated : 25 Mar 2021 10:46 AM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
25ம் தேதி புத பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் தனது சஞ்சாரத்தின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தருவார்.

அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதைத் திறமையாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். மிகவும் கவனமாகப் படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை தரிசித்து வணங்கி வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக அதேசமயம் நடந்தேறும். நல்ல பலனையும் தரும்.
*****************
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் எட்டாமிடத்தில் மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவரின் பார்வையால் சுப பலன்கள் ஏற்படும்.
வீண்செலவு ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம்.

னவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

உறவினர்களிடம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு மற்ற விஷயங்களில் ஈடுபட்டு கவனத்தைச் சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
******************************************************
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி ராசிநாதன் புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் புதன் ஏழாமிடத்திற்கு மாறுவதால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும்.

பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர் களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பணப் புழக்கம் திருப்திதரும். கலைத்துறையினருக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் போட்டிகள் குறையும்.
************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரைகன்னிவார ராசிபலன்கள்பலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்KadagamSimmamKanniRasipalangalPalangalVaara rasipalangalJodhidamJodhida palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x