மீனம் ராசியினருக்கான மே மாத பலன்கள் - முழுமையாக | 2023

மீனம் ராசியினருக்கான மே மாத பலன்கள் - முழுமையாக | 2023
Updated on
2 min read

மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-05-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறும் மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.

ரேவதி: இந்த மாதம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: லஷ்மி நரசிம்மரை வணங்க குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 04-05-2023 காலை 09:21 மணி முதல் 06-05-2023 மாலை 03:58 மணி வரை | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in