தனுசு ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

தனுசு ராசியினருக்கான பிப்ரவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023
Updated on
2 min read

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: 04-02-2023அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-02-2023 அன்று சுக்ர பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21-02-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத தனுசு ராசியினரே... நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த மாதம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

பெண்களுக்கு எந்த நிலையிலம் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு யாருக்கும் உத்திர வாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மூலம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பூராடம்: இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல் - வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

உத்திராடம்: இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும் | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பிப்ரவரி மாத பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in