

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் புத, ராகு, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றங்கள்: 06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
நேர்கொண்ட பார்வையினால் எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்கும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு அல்ல மதிப்புள்ள பேச்சு என மற்றவர்கள் நினைப்பார்கள். உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.
பெண்கள் உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் உண்டாகும்.
திருவோணம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.
அவிட்டம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாகப் பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வலியs சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.
பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையைப் போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 26, 27
-----------------------------------------
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |