மீன ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; வாகனத்தில் கவனம்; நிதானம் தேவை; காரியத்தடை விலகும்

மீன ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; வாகனத்தில் கவனம்; நிதானம் தேவை; காரியத்தடை விலகும்
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :
இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.

கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. . வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தற்காலிகப் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரியத் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.

ரேவதி:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் சென்று வலம் வருவது பல நன்மைகளை அள்ளித்தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in