மீன ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்; எச்சரிக்கை அவசியம்; லாபம் அதிகரிக்கும்; எவரையும் அனுசரிக்கவும்; மதிப்பு கூடும்! 

மீன ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்; எச்சரிக்கை அவசியம்; லாபம் அதிகரிக்கும்; எவரையும் அனுசரிக்கவும்; மதிப்பு கூடும்! 

Published on

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சமூக நோக்குடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக்கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்தவொரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

உடல்நலத்தினைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மனசஞ்சலம் அகலும். சளி உபாதைகள் தீரும்.

பூரட்டாதி:
இந்த மாதம் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும்.

உத்திரட்டாதி:
வீண்பழி சுமத்தி உங்களை விட்டுப் பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேருவார்கள். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

ரேவதி:
இந்த மாதம் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியம். பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19
*****

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in